TN Election 2026| கோவையில் 20 ஆயிரத்து 265 வாக்குகள்.. லேட்டஸ்ட் டேட்டா

TN Election 2026| கோவையில் 20 ஆயிரத்து 265 வாக்குகள்.. லேட்டஸ்ட் டேட்டா

கோவை மாவட்டத்தில் 20, 265 பேர் அஞ்சல் வாக்குப்பதிவு கோவை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அரசு ஊழியர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் என மொத்தம் 20 ஆயிரத்து 265 பேர் அஞ்சல் வாக்கு செலுத்தியுள்ளனர். கோவையில் 28 ஆயிரத்து 20 பேர் அஞ்சல் வாக்கு செலுத்த தகுதியுள்ளவர்கள். இவர்களில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் வாக்குகளைச் சேகரித்தனர். சுமார் 7 ஆயிரத்து 241 தேர்தல் ஊழியர்கள் அவர்களுக்குட்பட்ட தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் பணி புரிந்ததால், தாங்கள் பணியாற்றிய வாக்குச்சாவடிகளிலேயே நேரடியாக வாக்களித்தனர். மேலும் ராணுவ வீரர்கள் தங்களது அஞ்சல் வாக்குகளை செலுத்த வருகிற 3-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 185 துணை ராணுவத்தினர் தங்களது வாக்குகளை செலுத்தி உள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com