கலாம் கனவு மெய்ப்பட உறுதியேற்போம் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

அப்துல் கலாமின் நினைவுநாளான இன்று, அவரது கனவு மெய்ப்பட அனைவரும் உறுதி ஏற்போம் என, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கலாம் கனவு மெய்ப்பட உறுதியேற்போம் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
Published on

அப்துல் கலாமின் நினைவுநாளான இன்று, அவரது கனவு மெய்ப்பட அனைவரும் உறுதி ஏற்போம் என, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், தேசத்தின் வளர்ச்சிக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் அப்துல் கலாம் என்று புகழாரம் சூட்டி உள்ள அவர், "இந்தியா வல்லரசாக வேண்டும்" என்ற கலாமின் கனவு மெய்ப்பட அனைவரும் அயராது உழைக்க உறுதி ஏற்போம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். கனவு காணுங்கள்...கனவுகளை எண்ணங்களாக்கி... எண்ணங்களை செயல்களாக மாற்றுங்கள் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தமது டுவிட்டர் பதிவில் வலியுறுத்தி உள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com