"குடிசைகள் அற்ற நகரங்களை உருவாக்க நடவடிக்கை" - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்

'அனைவருக்கும் வீடு' என்ற திட்டத்தை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
"குடிசைகள் அற்ற நகரங்களை உருவாக்க நடவடிக்கை" - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்
Published on
'அனைவருக்கும் வீடு' என்ற திட்டத்தை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். தமிழகம் மற்றும் ஜெர்மன் அரசு இணைந்து நடத்தும் அனைத்து தரப்பு மக்களுக்கும், வாழத்தக்க வருங்கால நகரங்கள் என்ற தலைப்பிலான இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்ம் சென்னையில் இன்று தொடங்கியுள்ளது. இதில் பங்கேற்று பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், குடிசைகளற்ற நகரங்களை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதற்காக, 'தொலைநோக்கு திட்டம் 2023'-ன் கீழ் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியாவிலேயே வேகமாக நகரமயமாகி வரும் மாநிலமாக தமிழகம் விளங்குவதாகவும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் குறிப்பிட்டார்.
X

Thanthi TV
www.thanthitv.com