தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஆயிரத்து 204ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஆயிரத்து 204ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 31 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட அளவில் திண்டுக்கல்லில் 9 பேரும், சென்னையில் 5 பேரும், தஞ்சையில் 4 பேரும், தென்காசியில் 3 பேருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை, ராமநாதபுரம் மற்றும் நாகையில் தலா இருவருக்கும், கடலூர், சேலம், சிவகங்கை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை, சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் வெளியிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com