

சந்திப்பின் போது , ரெட் அலர்ட் எச்சரிக்கை தொடர்பாக தமிழக அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆளுநரிடம், முதலமைச்சர் விளக்கம் அளிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டம் - ஒழுங்கு நிலை, 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் விரைவில் வெளியாகவுள்ள உயர்நீதிமன்ற தீர்ப்பு உள்ளிட்டவை குறித்தும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.