சேலத்தில் ஈரடுக்கு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்
"விபத்துக்களை தடுப்பதற்காக சாலை திட்டம்"
விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விபத்து மற்றும் உயிர் சேதங்களை தவிர்ப்பதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். 8 வழி விரைவு சாலை திட்டம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், யாரிடமும் எதையும் பறித்து எந்த திட்டமும் நிறைவேற்றப்படாது எனவும் கூறினார். பொதுமக்கள் மற்றும் தமிழக அரசு ஒத்துழைப்புடன் 8 வழி பசுமை விரைவு சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
விழாவில் பங்கேற்ற திமுக எம்பி. , எம்எல்ஏ
ஈரடுக்கு மேம்பாலம் திறப்பு விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் தி.மு.க.வினரும் பங்கேற்றனர். சேலம் தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் வடக்கு தொகுதி திமுக எம்எல்ஏ ராஜேந்திரன் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
