ஆழியாறு அணையில் தண்ணீர் திறப்பு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு அணையில் இருந்து, பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
ஆழியாறு அணையில் தண்ணீர் திறப்பு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
Published on
கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு அணையில் இருந்து, பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, இன்று முதல் வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை 135 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் கோவை மாவட்டம் ஆனைமலை வட்டத்தில் உள்ள 6,400 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும், நீரை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்தி, உயர் மகசூலை பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com