சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுவப்பட்ட சிறப்பு வாய்ந்த ராணுவ பீரங்கி வண்டியை பொது மக்களின் பார்வைக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த 1971ம் ஆண்டு நடைபெற்ற போரின் போது விஜயந்தா என்ற இந்த ராணுவ பீரங்கி வண்டியும் பயன்படுத்தப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேலம் கொண்டுவரப்பட்ட இந்த ராணுவ பீரங்கி வண்டி புதுப்பிக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வானிலை தகவல் பலகையையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.