TN Assembly | MK Stalin vs RN Ravi | பேரவையில் காத்திருக்கும் அதிரடி
தமிழக சட்டப்பேரவையில் சித்த மருத்துவப் பல்கலை., உள்ளிட்ட 7 மசோதாக்கள் இன்று தாக்கல் தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் திருத்த மசோதா உள்ளிட்ட 7 மசோதாக்கள் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளன. பல காரணங்களைக் குறிப்பிட்டு ஆளுநர் இவற்றை திருப்பி அனுப்பி இருந்த நிலையில், சென்னையில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி 4வது முறையாக திருப்பி அனுப்பியதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து இருந்தார். இந்த சூழலில், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, குறிப்பிட்ட 4 திருத்தங்களும் சரி செய்யப்பட்டு மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ளன.
Next Story
