திடீரென பரவிய தீ... 49 செம்மறி ஆடுகள் பலி - அதிர்ச்சி | Tittakudi
திட்டக்குடி அருகே பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 49 செம்மறி ஆட்டுகுட்டிகள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள வாகையூர் பகுதியில் உள்ள விவசாய நிலமொன்றில் அமைக்கப்பட்டிருந்த ஆட்டுப்பட்டியில் 49 செம்மறி ஆட்டு குட்டிகள் தீயில் கருகி உயிரிழந்தன. ஆட்டின் உரிமையாளர் குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அருகில் உள்ள விவசாய கழிவுகளை எரித்த நிலையில், தீ பரவி இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Next Story
