சென்னையை அடுத்த பெரும்பாக்கம் எழில்நகரை சேர்ந்த செல்லப்பாண்டி என்பவர் கடந்த 7 மாதங்களுக்கு முன் குடி போதையில் மயங்கி விழுந்து இறந்துள்ளார். அவரது கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலி, மோதிரம் ஆகியவை திருடப்பட்டிருந்தன. இந்த நகைகளை, செல்லப்பாண்டியனின் நெருங்கிய நண்பரான நாகராஜ் தான் திருடியிருக்க வேண்டும் என அவரது உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்த சம்பவம் செல்லப்பாண்டியனின் பேரனான 17 வயது சிறுவனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், எழில்நகரில் தமது வீட்டு முன் நின்று கொண்டிருந்த நாகராஜை, சிறுவன் இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு தப்பி ஓடினான். தலையில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் உயிரிழந்தார். இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார், சென்னை வேளச்சேரியில் பதுங்கியிருந்த சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.