

சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் இரவில் திடீரென அலாரம் ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார், சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர். ஆனால், குறிப்பிட்ட நேரம் வரை ஒலித்த அலாரம், தானாகவே நின்று விட்டது. இதுதொடர்பாக வங்கி மேலாளரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவொற்றியூர் தனியார் வங்கியை பொறுத்தவரை அடிக்கடி இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவதாகவும், அலாரம் வெகுநேரம் ஒலித்தால் கூட வங்கி அதிகாரிகள் யாரும் வருவதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.