Tiruvarur | பள்ளியில் திடீர் கேஸ் கசிவு - உடனே வெளியேற்றப்பட்ட மாணவர்கள்... பரபரப்பு

பள்ளியில் திடீர் கேஸ் கசிவு - உடனே வெளியேற்றப்பட்ட மாணவர்கள்... பரபரப்பு

பள்ளியில் திடீர் கேஸ் கசிவு - உடனே வெளியேற்றப்பட்ட மாணவர்கள்... பரபரப்பு முத்துப்பேட்டை அருகே அரசு பள்ளி சமையலறையில் கேஸ் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம் ஆலங்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் மதிய உணவு தயாரிக்கும்போது கேஸ் டியூப்பில் கசிவு ஏற்பட்டு அடுப்பில் திடீரென தீப்பற்றியது. தகவல் அறிந்த ஆசிரியர்கள், மாணவர்களை உடனடியாக வெளியேற்றினர். பின்னர் அங்கு வந்த முன்னாள் மாணவர் ஒருவர் ஈர சாக்கு கொண்டு தீயை அணைத்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com