வெறிநாய் கடித்து 20 பேர் காயம் : வெறிநாயை பிடிக்க ஊழியர்கள் தீவிரம்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை மற்றும் பெருக வாழ்ந்தானை சுற்றியுள்ள கிராமங்களில் சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று, வழியில் காண்போரையெல்லாம் எல்லாம் கடித்துக் குதறியுள்ளது.
வெறிநாய் கடித்து 20 பேர் காயம் : வெறிநாயை பிடிக்க ஊழியர்கள் தீவிரம்
Published on
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை மற்றும் பெருக வாழ்ந்தானை சுற்றியுள்ள கிராமங்களில் சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று, வழியில் காண்போரையெல்லாம் எல்லாம் கடித்துக் குதறியுள்ளது. இதில் 20 பேர் காயமடைந்துள்ளனர். வெறிநாய் கடித்தவர்கள் ஒருவர் பின், ஒருவராக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட போது தான் இந்த விவரம் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து மன்னார்குடியிலிருந்து 108 ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்பட்டு, வெறிநாய் கடித்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். மேலும் வெறி நாயைப் பிடிப்பதற்கு, உள்ளாட்சி பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். வெறிநாய் பிடிபடவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com