Tiruvannamalai | வைகாசி கிரிவலம் - தி.மலையில் குவிந்த 15 லட்சம் பக்தர்கள்.. திணறிய பயணிகள்

திருவண்ணாமலையில் வைகாசி மாத கிரிவலம் முடிந்து பக்தர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டதால் ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது... வைகாசி மாத கிரிவலத்திற்காக நேற்று முன்தினம் முதல் தமிழ்நாடு மட்டும் இன்றி வெளி மாநில பக்தர்கள் சுமார் 15 லட்சத்துக்கு மேற்பட்ட திருவண்ணாமலையில் குவிந்தனர். பின்னர் இன்று காலை திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் திருப்பதி, வேலூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல பக்தர்கள் ரயில் நிலையத்தில் குவிந்தனர். அப்போது விழுப்புரலிருந்து திருப்பதி வரை செல்லும் விரைவு ரயில் வந்தவுடன் அதில் பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு ரயிலில் ஏறி பயணம் மேற்கொண்டனர்

X

Thanthi TV
www.thanthitv.com