Tiruvannamalai | பெரியநந்திக்கு சிறப்பு பூஜை - மனம் உருகி வேண்டிய பக்தர்கள்

பெரியநந்திக்கு சிறப்பு பூஜை

சனி மகா பிரதோஷத்தையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உள்ள பெரிய நந்திபகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பெரிய நந்திக்கு மஞ்சள், விபூதி, குங்குமம், தேன், தயிர், சந்தனம் மற்றும் ஆயிரம் லிட்டர் பால் ஆகியவற்றை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனை‌ தொடர்ந்து சாமந்தி, சம்பங்கி, கோழிக்கொண்டை, வில்வ இலை உள்ளிட்ட வண்ண மலர்களால் மாலைகள் சாற்றப்பட்டு பஞ்சமுக தீபாராதனை நடைபெற்றது... திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்..

X

Thanthi TV
www.thanthitv.com