தந்தையின் தலையை துண்டித்த மகன் - ஜாமினில் வெளிவந்த நபர் மீண்டும் கைது

திருவண்ணாமலை அருகே 3 மாத குழந்தையை வெட்டிக் கொன்ற நபர், தனது தந்தையின் தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தந்தையின் தலையை துண்டித்த மகன் - ஜாமினில் வெளிவந்த நபர் மீண்டும் கைது
Published on

திருவண்ணாமலை அருகே 3 மாத குழந்தையை வெட்டிக் கொன்ற நபர், தனது தந்தையின் தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காம்பட்டு கிராமத்தை சேர்ந்த கார்த்திகேயன், கடந்த ஜனவரி மாதம், தனது 3 மாத குழந்தையை கொடூரமாக வெட்டி கொலை செய்தார். இந்த வழக்கில் கைதாகி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவரை, கடந்த 10 நாட்களுக்கு முன்பு அவரது தந்தை தனபால் ஜாமினில் வெளியில் எடுத்துள்ளார். இந்நிலையில், வீட்டின் முன் வாசலில் உறங்கிக் கொண்டிருந்த தந்தையின் தலையை துண்டித்து, அந்த நபர் படுகொலை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த வாணாபுரம் காவல் துறையினர் கார்த்திகேயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜாமினில் வெளியே வந்த கொலையாளி, தனது தந்தையை கொடூரமாக கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com