மகா சிவராத்திரிக்கு சென்றபோது பயங்கரம்.. தீப்பிடித்த அரசு பஸ்.. அலறிய பயணிகள்
திருவண்ணாமலையில் இருந்து மேல்மலையனூர் சென்ற அரசு பேருந்து திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால், பயணிகள் அலறி அடித்து ஓடினர். மகா சிவராத்திரி தரிசனத்திற்காக மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயிலுக்குச் செல்வதற்காக, திருவண்ணமலையில் இருந்து அரசு பேருந்தில் பயணிகள் புறப்பட்டுச் சென்றனர். வேங்கிக்கால் என்ற இடத்தருகே சென்றபோது, பேருந்தின் எஞ்சின் பகுதி திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால் ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தியதால், பயணிகள் அலறியடித்தபடி இறங்கி ஓடினர். பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து, தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
Next Story
