ஜவ்வாது மலை பகுதியில் தீ விபத்து : 4 ஏக்கர் பரப்பளவிலான மூலிகை செடிகள் எரிந்து நாசம்

திருவண்ணாமலை மாவட்டம்,கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட ஜவ்வாதுமலையில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஏராளமான மூலிகை மரங்கள் எரிந்து நாசமாகியது.
ஜவ்வாது மலை பகுதியில் தீ விபத்து : 4 ஏக்கர் பரப்பளவிலான மூலிகை செடிகள் எரிந்து நாசம்
Published on
ஜவ்வாது மலையில் நடைபெற்ற 22 வது கோடை விழாவில் சில மர்ம நபர்கள் சிகரெட் உள்ளிட்ட தீ பரவும் பொருட்களை ஜவ்வாது மலைகாடு பகுதியில் எரிந்ததனால் வனப்பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென அடுத்தடுத்த இடங்களுக்கும் பரவியதால், சுமார் 4 ஏக்கர் பரப்பளவிலான முலிகை செடிகள் மற்றும் அரிய வகை மரங்கள் தீயில் எரிந்து சாம்பல் ஆயின.இந்த விபத்தினை அணைப்பதற்கு தீயணைத்துறை உள்ளிட்ட எந்த துறையும் வரவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com