திருவண்ணாமலையில் கனமழை - மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவுறுத்தியுள்ளார்.
திருவண்ணாமலையில் கனமழை - மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
Published on

ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மழையின் காரணமாக மண் சுவர் வீடுகள் இடிந்து விழும் ஆபத்து உள்ளதால் அங்கு வசிப்பர்கள் தற்காலிக முகாம்களுக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மழை பாதிப்புக்களை உடனுக்குடன் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கும் வகையில் தனி கட்டுபாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாகவும், வெள்ளம் மற்றும் பாதிப்புகள் குறித்து உடனடியாக புகார் தெரிவிக்க 1077 என்ற இலவச கட்டுப்பாட்டு எண்ணை பொது மக்கள் தொடர்பு கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com