வெறியாட்டம் ஆடி ஊரையை நடுங்கவிட்ட வெறியன் -பிடித்து இழுத்து சென்ற போலீஸ்

x

திருவண்ணாமலை மாவட்டம் சேவூரில் இளைஞர் ஒருவர் மதுபோதையில், ஊராட்சி மன்ற அலுவலகத்தை அடித்து நொறுக்கி, அரசு பணியாளரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேவூர் ஸ்ரீராம் நகரில் வசித்து வருபவர் மணிகண்டன். சாலை பணிக்காக இவரது வீட்டின் வெளியே உள்ள தொட்டியை அகற்ற ஊராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், மதுபோதையில் ஊராட்சி அலுவலகத்திற்கு சென்று ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்