

திருவண்ணாமலை அடுத்த தண்டராம்பட்டு பகுதியில் அரசு மிகவும் பிற்பட்டோர் நல மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில், விடுதியில் வழங்கப்படும் உணவில், வண்டுகள் மற்றும் புழுக்கள் காணப்படுவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். பல முறை புகார் தெரிவித்தும் புதிதாக விடுதி காப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அந்தோணி ராஜ், நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.