Tiruvannamalai Girivalam | திடீரென இருளில் மூழ்கிய தி.மலை கிரிவல பாதை
திடீரென இருளில் மூழ்கிய தி.மலை கிரிவல பாதை
திருக்கார்த்திகை தீபத் திருவிழா இன்று துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்க உள்ள நிலையில், திருவண்ணாமலையில் நேற்று இரவு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டனர். அப்போது மாநகராட்சிக்கு உட்பட்ட செங்கம் சாலையில் இருந்து சுமார் 2.5 கிலோமீட்டர் தூரத்திற்கு மின்விளக்குகள் எரியாததால் கிரிவலப் பாதை இருளில் மூழ்கியது. இதனால் பக்தர்கள் செல்போன் டார்ச் லைட் மற்றும் வாகனங்களின் முகப்பு விளக்குகளைப் பயன்படுத்தி கிரிவலம் சென்றனர். இரவு நேரத்தில் மின்விளக்குகள் இல்லாததால் பக்தர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
