

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், வாடகை பாக்கி தராத 118 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். ஒரு கோடியே 88 லட்சம் ரூபாய் வாடகை பாக்கியை வழங்காததால், கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதாக அவர்கள் விளக்கம் தெரிவித்தனர். நகராட்சி அதிகாரிகளின் இந்த திடீர் நடவடிக்கையால், வியாபாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.