Tiruvannamalai | அண்ணாமலையார் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - காத்திருந்து சாமி தரிசனம்
Tiruvannamalai | அண்ணாமலையார் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - காத்திருந்து சாமி தரிசனம்
Tiruvannamalai | அண்ணாமலையார் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - மணிக்கணக்காய் காத்திருந்து சாமி தரிசனம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.. பொது தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் சுமார் 3 முதல் 4 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். 50 ரூபாய் கட்டண தரிசனத்திலும் பக்தர்கள் 2 முதல் 3 மணி நேரம் வரை காத்திருந்து அண்ணாமலையாரை வழிபட்டு வருகின்றனர். இதனிடையே, குறுக்கு வழியாக எதிர் திசையில் பக்தர்கள் வருவதால், சுவாமி தரிசனம் முடித்து வெளியே வரும் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். விடுமுறை நாட்களில் முதியோர், கர்ப்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தரிசன ஏற்பாடு செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
