"7.5% இடஒதுக்கீட்டை தமிழக அரசு போராடி பெற்றது" - மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேச்சு

தமிழக அரசு போராடி கொண்டு வந்த 7புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் அரசு பள்ளி ஏழை மாணவர்கள் தற்போது மருத்துவம் படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
"7.5% இடஒதுக்கீட்டை தமிழக அரசு போராடி பெற்றது" - மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேச்சு
Published on

திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் பகுதியில் 622 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு ஆசிரியர்களை பாராட்டி பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய சந்தீப் நந்தூரி தமிழக அரசு போராடி கொண்டு வந்த 7 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் அரசு பள்ளி ஏழை மாணவர்கள் தற்போது மருத்துவம் படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார். இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த ஆண்டு 8 அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மருத்துவம் படித்து வருவதாகவும் அவர் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com