Tiruvannamalai Attack | பெற்ற தாயையே கொடூரமாக தாக்கி கீழே தள்ளிவிட்ட டாக்டர் | அதிர்ச்சி வீடியோ
Tiruvannamalai Attack | பெற்ற தாயையே கொடூரமாக தாக்கி கீழே தள்ளிவிட்ட டாக்டர் | அதிர்ச்சி வீடியோ
சொத்துக்காக தாயை கொடூரமாக தாக்கிய அரசு மருத்துவர் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே, சொத்து தகராறில் பெற்ற தாயையே அரசு மருத்துவர் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன், வந்தவாசி நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருவத்தவராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது தாய் மல்லிகாவிடம் சொத்து கேட்டு தொடர்ந்து தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக, தனது தாய் மல்லிகாவை, மருத்துவர் ஆனந்தன் சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. பலமுறை புகார் அளித்தும் ஆனந்தன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ள அவரது சகோதரர், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
