ஆர்ப்பரித்து கொட்டும் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி.. சுற்றுலா பயணிகளுக்கு தடை

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரியில் பெய்த

கன மழையால், ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை வித்துள்ளனர். வருகின்ற 14ஆம் தேதி வரை

ஜலகாம்பாறை நீர் வீழ்ச்சியில் குளிக்க தடை நீடிக்கும் என அறிவித்துள்ளனர். இதன் காரணமாக ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சிக்கு குளிக்க வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com