மழைநீரில் சாய்ந்து நெற்பயிர்கள் சேதம் - வேதனையில் விவசாயிகள்
மழைநீரில் சாய்ந்து நெற்பயிர்கள் சேதம் - வேதனையில் விவசாயிகள்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் சாய்ந்து கிடப்பதால் விவசாயிகள்
கவலை அடைந்துள்ளனர். திடீரென பெய்த கனமழையால் அரசூர், சிற்றரசூர், ஆவூர், பனப்பாக்கம், பெரிய கரும்பூர் உள்ளிட்ட பல கிராமங்களில் பல ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழைநீரில் சாய்ந்து அறுவடை செய்ய முடியாத
சூழல் ஏற்பட்டுள்ளது. தண்ணீரை வெளியேற்றிய பிறகுதான் அறுவடை பணிகளை மேற்கொள்ள முடியும் என்றும் , தண்ணீரில் மூழ்கியுள்ள நெற்பயிர்கள் அழுகி வீணாக கூடும் என்றும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Next Story
