திருவள்ளூர் : ஊராட்சி மன்ற அலுவலகம் முன் திரண்டு மக்கள் போராட்டம்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஊராட்சி செயலாளர் ஆவணங்களை கொட்டி எரித்ததாக கூறி, கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் : ஊராட்சி மன்ற அலுவலகம் முன் திரண்டு மக்கள் போராட்டம்
Published on

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள பூங்குளம் ஊராட்சியின் செயலாளராக உள்ள செந்தில்குமார் என்பவர் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் வெளியே ஆவனங்கள் சிலவற்றை எரித்ததாக கூறப்படுகிறது. புகைப்படம் ஒட்டிய காகிதங்கள் போன்ற ஆவணங்கள் எரிந்து கொண்டிருப்பதை கண்ட கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊராட்சியை மூன்று ஆண்டு காலம் நிர்வகித்த செந்தில்குமார் பல்வேறு முறைகேடுகள் செய்துள்ளதாகவும், ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்பேற்றால் தாம் செய்த முறைகேடுகள் தெரிந்துவிடும் என்பதாலேயே ஆவணங்களை எரித்துவிட்டதாகவும் மக்கள் குற்றம் சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த போலீசார், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து, கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com