திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பொன்னேரி எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன் நேற்று வாக்கு சேகரித்தார். அவரது வாகனத்தை மறித்த பொதுமக்கள், கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பல ஆண்டுகளாக சாலைகள் சீரமைக்காமல் இருப்பது ஏன்? என கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே, சாலை அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு உள்ளதாகவும், விரைவில் சாலை அமைக்கும் பணி தொடங்கும் எனவும் எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன் விளக்கம் அளித்ததை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.