Tiruvallur | JNN College | ஜே.என்.என் பொறியியல் கல்லூரியின் 14-வது பட்டமளிப்பு விழா

Tiruvallur | JNN College | ஜே.என்.என் பொறியியல் கல்லூரியின் 14-வது பட்டமளிப்பு விழா

Tiruvallur | JNN College | ஜே.என்.என் பொறியியல் கல்லூரியின் 14-வது பட்டமளிப்பு விழா சென்னையை அடுத்த கன்னிகைப்பேரில் உள்ள J.N.N. பொறியியல் கல்லூரியின் 14-வது பட்டமளிப்பு விழா விமரிசையாக நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சென்னை - தைபே பொருளாதார மற்றும் கலாச்சார மையத்தின் இயக்குநர் ஜெனரல் ஸ்டீபன் S.C. ஹ்சு (Stephen S.C. Hsu) சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். விழாவில், கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 300 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய அவர், பாடப்பிரிவுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரொக்கப் பரிசுகளையும் வழங்கிப் பாராட்டினார்.

X

Thanthi TV
www.thanthitv.com