

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஏரிக்கு செல்லும் கால்வாயில் தனியார் பள்ளி கழிவு நீரை திறந்து விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பஞ்செட்டியில் உள்ள தனியார் பள்ளியில் இருந்து கழிவு நீர் திறந்து விடப்படுவதால் ஆமூர் ஏரி மாசடைந்து வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்கள், கழிவுநீர் ஏரி கால்வாயில் செல்லாதவாறு மண் கொட்டி அடைத்தனர். இதுதொடர்பாக தனியார் பள்ளி மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.