Tiruvallur | 7 மாத கர்ப்பிணி மீது சரமாரி தாக்குதல் - திமுக உறுப்பினர் மீது புகார்
திருவள்ளூரில் பூக்கடை போடுவதில் ஏற்பட்ட தகராறில் 7 மாத கர்ப்பிணியை சாலையில் வைத்து உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் பிரியதர்ஷினியின் தாயார் அலமேலு, வீரராகவர் கோயில் அருகில் பூ மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார்.
இவர்களது கடையின் அருகே புகழேந்தி என்பவரும் கடை வைத்து நடத்தி வரும் நிலையில், வியாபாரம் தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது தான் ஒரு திமுக உறுப்பினர் எனக் கூறிக்கொண்டு புகழேந்தி அங்கே கடை வைக்க கூடாது என மிரட்டி ப்ரியதர்ஷினியை கட்டையால் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த ப்ரியதர்ஷினி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழித்ததாக குற்றஞ்சாட்டி உள்ளார்.
மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்க இல்லை என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
