திருவள்ளூர் மாவட்டம் எடப்பாளையத்தில் உள்ள அய்யா வைகுண்டர் சுவாமி ஆலயத்தில், ஆடி திருவிழாவையொட்டி அய்யா வைகுண்டர் சுருள் பலகார வகைகள் அலங்கார வாகனத்தில் பதிவலம் வந்தார். காலை முதலே அய்யா வைகுண்டர் சுவாமிக்கு சிறப்பு பால் பணிவிடை மற்றும் உக பிடிப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து குழந்தை வரம் வேண்டி 500-க்கும் மேற்பட்ட பெண்கள் மடிப்பிச்சை தர்மம் எடுத்து, சுவாமிக்கு அன்ன தானம் படைத்து வழிபட்டனர். பின்னர் சுருள் பலகார வகைகள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அய்யா வைகுண்டர் எழுந்தருளி, பதிவலம் வந்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.