Tiruvallur Accident | பனியால் பயங்கர விபத்து.. சிக்கிய 2 பேர் நிலை?- திருவள்ளூரில் அதிர்ச்சி

x

திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயல் அருகே பனிப்பொழிவு காரணமாக ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் காயம் அடைந்தனர்.

வைஷ்வணி நகர் பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக முன்னால் செல்லும் வாகனம் தெரியாத நிலை ஏற்பட்டது. இதனால் முன்னால் சென்ற பேருந்தின் மீது சரக்கு வாகனம் ஒன்று மோதி பின்னர் கட்டுப்பாட்டை இழந்து, மின்கம்பத்தின் மீதும் மோதியுள்ளது.

இந்த விபத்தில் சரக்கு வாகன ஓட்டுநர் சிறு காயங்களுடன் தப்பினார். ஓட்டுநரின் உதவியாளர் சரக்கு வாகனத்திற்குள்ளேயே சிக்கிக்கொண்டார். அவரை தீயணைப்புத்துறையினர் போராடி மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்