Tiruvallur || சாலையில் கிடந்தரூ.1.20 லட்சம் செல்போன் - முதியவர் செய்த நெகிழ்ச்சி செயல்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில், சாலையில் கிடந்த விலை உயர்ந்த செல்போனை ஒப்படைத்த முதியவர் மற்றும் ஆட்டோ ஓட்டுநரை போலீசார் பாராட்டினர்.
பொன்னேரியில் பாத்திரக்கடை நடத்தி வரும் பாண்டியன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் சந்தான ஜெயக்குமார் ஆகியோர், சாலையில் கிடந்த, சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போனை பொன்னேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து அந்த செல்போன், அதன் உரிமையாளரான தனியார் நிறுவன மேலாளர்
பால் ஆரோக்யம் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது
Next Story
