நடுவீதியில் பெண்ணுக்கு பிரியாணி, மதுபானம், பீடி - பேய் ஓட்டும் வீடியோவால் அதிர்ச்சி
நடுவீதியில் பெண்ணுக்கு பிரியாணி, மதுபானம், பீடி - பேய் ஓட்டும் வீடியோவால் அதிர்ச்சி
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், பெண்ணை நடுவீதியில் அமர வைத்து சாமியார் ஒருவர், பேய் ஓட்டுவதாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. பழனி சாமியார் என்பவர், வாடகைக்கு கடை எடுத்து பில்லி சூனியம், திருஷ்டி கழிப்பது உள்ளிட்டவற்றை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஒரு பெண்ணுக்குள் ஆண் பேய் இருப்பதாக கூறி நடுவீதியில் அமர வைத்து பிரியாணி, மதுபானம், பீடி உள்ளிட்டவற்றை கொடுத்து, அந்தப் பெண்ணை சாப்பிடச் செய்தனர். இதனால் அச்சமடைந்த பொதுமக்கள், அத்துமீறி நடந்து கொண்ட சாமியார் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
