Tiruttani Theemithi Vizha | திரவுபதி கோயில் திருவிழா.. அக்னி குண்டத்தில் இறங்கி பக்தர்கள் பரவசம்
திருத்தணி அருகே திரவுபதி அம்மன் கோயில் அக்னி குண்ட வசந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் தீமித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி காந்தி நகரில் உள்ள திரவுபதி அம்மன் கோயிலில் கடந்த மார்ச். 27-ல் தீமிதித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 18 நாட்களாக நடைபெறும் திருவிழாவின் சிகர நிகழ்வான தீமிதித் திருவிழா நடைபெற்றது. இதில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மஞ்சள் உடைகள் அணிந்து கொண்டு தீமித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
Next Story
