Tiruttani Temple | திருத்தணி முருகன் கோவிலில் திடீர் தீ விபத்து..நெய் விளக்கு ஏற்றும் போது அதிர்ச்சி

திருத்தணி முருகன் கோவிலில் திடீர் தீ விபத்து..நெய் விளக்கு ஏற்றும் போது அதிர்ச்சி

#tiruttanimurugan #tiruttani #thanthitv திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பக்தர்கள் நெய் விளக்கு ஏற்றும் இடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.முருகனுக்கு உகந்த நாளாக கருதப்படும் செவ்வாய்க்கிழமையையொட்டி, பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். தரிசனத்துக்குப் பிறகு பக்தர்கள் பிரார்த்தனை நிறைவேற நெய் தீபம் ஏற்றுவது வழக்கம். இதற்காக கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த இரும்புத் தகடு பகுதியில், நெய் விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன.அப்போது அதிகளவு வெப்பம் காரணமாக திடீரென தீப்பற்றியது. தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த நிலையில், அருகில் இருந்தவர்கள் உடனடியாக தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com