டாஸ்மாக் கடையில் ஓட்டை போட்டு - உள்ளே இறங்கி `உய்யால ஊலால..' திருத்தணி அருகே பரபரப்பு
பீர் குடித்தே ஆக வேண்டும் என இருந்த குடிமகன்கள் சிலர், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே மத்தூர் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக் கடையின் சுவரில் துளையிட்டு, உள்ளே நுழைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதோடு, உள்ளே இருந்ததில் 6 மது பீர் பாட்டில்களை மூக்கு முட்ட குடித்து விட்டு, 5 ஆயிரம் ரூபாய் பணத்தையும் திருடிச் சென்றனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த திருத்தணி போலீசார், மர்ம நபர்களை வலைவீசித் தேடி வருகின்றனர்.
Next Story
