திருத்தணி : ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திருத்தணி அருகே தாழவேடு பகுதியில் ஆந்திராவுக்கு சரக்கு ஆட்டோவில் கடத்தமுயன்ற இரண்டரை டன் ரேஷன் அரிசியை குடிமை பொருள் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருத்தணி : ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
Published on
திருத்தணி அருகே தாழவேடு பகுதியில் ஆந்திராவுக்கு சரக்கு ஆட்டோவில் கடத்தமுயன்ற இரண்டரை டன் ரேஷன் அரிசியை குடிமை பொருள் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஆட்டோ ஓட்டுநர்கள் உட்பட 4 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், திருத்தணி அரசு கல்லூரி விடுதிக்கு வழக்கப்பட்ட அரிசியை அவர்கள் கடத்திச்சென்றது தெரியவந்தது. பின்னர், கடத்தலுக்கு பயன்படுத்திய 2 சரக்கு ஆட்டோக்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், திருத்தணி அரசு கல்லூ​ரி விடுதியில் சோதனை மேற்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, கல்லூரி விடுதி வார்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
X

Thanthi TV
www.thanthitv.com