Tirupur Pocso Arrest | திருப்பூரில் போக்சோவில் கைதான பாதிரியார்

திருப்பூரில் போக்சோவில் கைதான பாதிரியார்

Tirupur Pocso Arrest | திருப்பூரில் போக்சோவில் கைதான பாதிரியார் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – பாதிரியார் போக்சோவில் கைது திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, பாதிரியார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். குன்னத்தூர் மரியபுரத்தில் உள்ள தேவாலய வளாகத்தில் அரசு உதவிபெறும் பள்ளி செயல்பட்டுவருகிறது. ராபர்ட் (57) என்பவர் கடந்த ஐந்து வருடங்களாக அப்பள்ளியின் தாளாளராகவும் பணியாற்றி வருகிறார். இந்த சம்பவம், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com