விவசாயி எடுத்த வித்தியாசமான முடிவு - ஆச்சரியத்தில் ஓட்டுமொத்த திருப்பூர் விவசாயிகள்
திருப்பூர் சுற்று வட்டார பகுதிகளில் முறையான தண்ணீர் கிடைக்காததால் நெல் சாகுபடியை முழுவதுமாக கைவிட்டு கிணற்றுப் பாசனத்தை பயன்படுத்தி விவசாயம் செய்யப்படுகிறது. இந்நிலையில் செல்வம் என்பவர் 4 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து இயற்கை முறையில் தூய மல்லி ரக நெல்லை பயிரிட்டுள்ளார். முறையான ஒளிச்சேர்க்கை, அனைத்து இலைகளுக்கும் சிலிக்கான் சத்துக்கள் ஆகியவற்றை இயற்கை முறையில் கொடுத்து வருவதாக தெரிவித்த அவர் இன்னும் 40 நாட்களில் நெல் அறுவடைக்கு தயாராக உள்ளதாக கூறினார். 30 ஆண்டுகளாக பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் சாகுபடியை கைவிட்ட விவசாயிகள் இயற்கை விவசாயி செல்வத்தின் இந்த முயற்சிக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
Next Story
