நிறைவேறிய நீண்ட நாள் கனவு.. திருப்பூரில் புதிதாக தொடங்கப்பட்ட DNC சிட்ஸ் நிறுவனத்தின் 44வது கிளை

டி.என்.சி. D.N.C. சிட்ஸ் நிறுவனத்தின் 44வது கிளை திறப்பு விழா திருப்பூரில் நடைபெற்றது. திருப்பூர் பெருமாநல்லூர் சாலையில் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்ச்சியில் டி.என்.சி. குரூப் ஆஃப் கம்பெனியின் தலைவர் இளங்கோவன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திருப்பூர் போன்ற தொழில் நகரத்தில் கிளையை தொடங்க வேண்டும் என்ற நீண்ட நாள் கனவு நிறைவேறியதாகவும் , திருப்பூரில் உள்ள நடுத்தர மற்றும் அதற்கு கீழான மக்களின் கனவுகளை நினைவாக்கும் வகையில் டி.என்.சி. சிட்ஸ் நிறுவனம் செயல்படும் எனவும் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com