மள மளவென தீ பற்றி எரிந்த லாரி அதிஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுனர்

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோயில் தேசிய நெடுஞ்சாலையில் லாரி தீப்பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோழித் தீவனம் ஏற்றி வந்த லாரி, எதிர்பாராத விதமாக தீப்பற்றி எரியத் தொடங்கியது. உடனடியாக லாரியை சாலையோரம் நிறுத்திய ஓட்டுநர், அதில் இருந்து இறங்கி உயிர் தப்பினார். சம்பவம் இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com