மனைவியுடன் சேர்த்து வைக்கக்கோரி செல்போன் டவரில் ஏறிய கணவர்

மனைவியுடன் சேர்த்து வைக்கக்கோரி செல்போன் டவரில் ஏறிய கணவர்
Published on
• தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் - ஜீவிதா தம்பதியருக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், ஜீவிதா தனது குழந்தைகளுடன் தாயாரை பார்க்க திருப்பூர் சென்றதாக தெரிகிறது. இதையடுத்து திருப்பூர் சென்ற விஜயகுமார், காவல் நிலையத்திற்குச் சென்று சமாதானம் பேசி, மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கோரியுள்ளார். இதையடுத்து போலீசாரும் அறிவுரை கூறி அனுப்பி வைத்த நிலையில், ஜீவிதா மீண்டும் கோபித்துக்கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த விஜயகுமார், ஊத்துக்குளி சாலை, சர்க்கார் பெரியபாளையத்தில் உள்ள செல்போன் டவரில் அதிகாலையில் ஏறி தற்கொலைக்கு முயன்றார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், விஜயகுமாரை பத்திரமாக மீட்டனர். ​இதையடுத்து, இருவரும் சமாதானம் அடைந்து பென்னாகரத்திற்கு புறப்பட்டுச் சென்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com