கடக்கும் போது தண்டவாளத்தில் சிக்கிய மாற்றுத்திறனாளி.. கடவுள் ரூபத்தில் வந்து மீட்ட ரயில்வே
திருப்பூர் ரயில் நிலையத்தில் மது போதையில் தண்டவாளத்தின் இடையே சிக்கிய மாற்றுத்திறனாளியை பொதுமக்கள் உதவியுடன் ரயில்வே போலீசார் மீட்டனர் .
திருப்பூர் ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளி முதியவர் ஒருவர் மது போதையில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, நிலை தடுமாறி தண்டவாளத்தில் அமர்ந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே போலீசார் உடனடியாக பொதுமக்கள் உதவியுடன் அவரை மீட்டு நடைமேடையில் அமர வைத்தனர்.
Next Story