தங்கம் வென்ற தங்க மகளுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்த பள்ளி ஆசிரியர்கள்
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற தேசிய அளவிலான தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில், திருப்பூரைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவி வர்ஷிகா தங்கம் வென்றார். 80 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் 12 புள்ளி 20 வினாடிகளில் ஓடி புதிய சாதனையை படைத்துள்ளார். மேலும் 400 மீட்டர் தொடர் ஓட்ட போட்டியிலும் பங்கு பெறுவதற்கு தேர்வாகி உள்ளார். ராஞ்சியில் இருந்து திருப்பூர் திரும்பிய வர்ஷிகா இன்று ஜெய்வாபாய் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு வருகை தந்தார் அவருக்கு ஆசிரியர்கள், சக மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Next Story
