அதிகாரியை மிரட்டிய இளைஞர்.. "நான் எப்போ சொன்னேன்.." - சட்டையை பிடித்ததும் தலைகீழாய் மாறிய பேச்சு.. பரபரப்பு காட்சி

திருப்பூரில் பத்திரிகையாளர் எனக் கூறி சாலையோர வியாபாரிகளிடம் வசூலில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில், ஆக்கிரமிப்பு செய்து வட மாநில இளைஞர்கள் கடை அமைத்த நிலையில், மாநகராட்சி ஊழியர்கள் அகற்றியுள்ளனர். அப்போது, அங்கு வந்த இளைஞர் ஒருவர் தான் பத்திரிகையாளர் என கூறி மாநகராட்சி ஊழியர்களுக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மது போதையில் இருந்த அவரை பிடித்து விசாரித்ததில், கடை அமைப்பதற்கு, வட மாநில இளைஞர்களிடம் தினமும் 300 ரூபாய் வசூல் செய்து வந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர், தனியார் பேருந்து நடத்துனர் என தெரியவர, மாநகராட்சி ஊழியர்கள் போலீசில் ஒப்படைத்துள்ளனர்...

X

Thanthi TV
www.thanthitv.com